Enable Javscript for better performance
18-இல் அஞ்சல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா- Dinamani

சுடச்சுட

    

    18-இல் அஞ்சல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா

    By DIN  |   Published on : 11th December 2016 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அஞ்சல் துறை, பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா போட்டியை வரும் 18-ஆம் தேதி நடத்துகிறது.
    இதுகுறித்து நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    அஞ்சல் துறை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி வினா போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
    அதன்படி நாமக்கல் அஞ்சல் கோட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பொதுஅறிவு, அஞ்சல் தலை சேகரிப்புப் பற்றிய விநாடி வினா போட்டி வரும் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தி ஸ்பெக்ட்ரம் அகாதெமி மெட்ரிக் பள்ளியில் நடைபெறவுள்ளது.
    இப்போட்டியில் நாமக்கல் அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பள்ளிகளைச் சார்ந்த 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளியின் மூலம் அஞ்சல் கண்காணிப்பாளர், நாமக்கல் அஞ்சல் கோட்டம், நாமக்கல் 637001 என்ற முகவரிக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    ஒவ்வொரு பள்ளியின் சார்பாக அதிகபட்சம் 3 பேர் கொண்ட குழுவாக மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். கோட்ட அளவில் முதலிடம் பெறும் பள்ளி அதன்பின் மண்டல அளவிலான விநாடி வினா போட்டியில் பங்கேற்க தகுதி பெறும்.
    மேலும் விவரங்களுக்கு நாமக்கல் தலைமை அஞ்சலக விற்பனை பிரதிநிதி சங்கரை 90428-55559 என்ற செல்லிடப்பேசி எண், திருச்செங்கோடு விற்பனை பிரதிநிதி யோகநாதனை 95977-85514 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ, 04286-220953 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai