சுடச்சுட

  

  நல்லூர் கந்தம்பாளையம் அருகே பீச்சாபாளையத்தில் கஞ்சா கடத்த முயன்ற இருவரை நல்லூர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
  நல்லூர் பகுதியில் பரமத்திவேலூர் காவல்துறை ஆய்வாளர் கணபதி தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  அப்போது நல்லூர் அருகே பீச்சாபாளையம் பேருந்து நிலையம் அருகே இருவர் நின்று கொண்டிருந்தனர்.
  சந்தேகத்தின்பேரில் போலீஸார் இருவரையும் பிடித்து அவர்கள் வைத்திருந்த வெல்ல சாக்கு மூட்டையைச் சோதனையிட்டதில் அதில் வீட்டு உபயோகப் பொருள்களுடன் 45 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
  இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் ஒருவர் மணியனூர் அருகே போயர் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (34) என்பதும், மற்றொருவர் சித்தாளந்தூர் அருகே நாகர்குளம் பகுதியைச் சேர்ந்த பாலு (46) என்பதும், இருவரும் தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரியவந்தது.
  இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai