சுடச்சுட

  

  கார்த்திகை தீபம்: பாலதண்டாயுதபாணி கோயிலில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு

  By DIN  |   Published on : 13th December 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, நாமக்கல் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 1,008 தீபங்கள் ஏற்றி திங்கள்கிழமை வழிபாடு செய்யப்பட்டது. இதேபோல் நகர் முழுவதும் கோயில்களின் முன் பக்தர்கள் சொக்கப்பனை (கூம்பு) கொளுத்தி மகிழ்ந்தனர்.
  கார்த்திகை தீப திருவிழா திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  இதையொட்டி பெண்கள் வீடுகள், தெருக்கள், கோயில்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
  நாமக்கல் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் மகா சங்கல்பம், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பால தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
  இரவு 7 மணிக்கு 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் வைக்கப்பட்டு இருந்த விளக்குகளில் பெண்கள் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர்.
  இதேபோல் நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில், சந்தைபேட்டைபுதூர் செல்வவிநாயகர் கோயில், குட்டைதெரு விநாயகர் கோயில், கடைவீதி சக்தி விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
  மேலும் நகர் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தது. பெரும்பாலான கோயில்களின் முன்பு சொக்கப்பனை (கூம்பு) கொளுத்தப்பட்டது. சுற்றிலும் நின்ற பக்தர்கள் உப்பைத் தூவினர். இதையொட்டி, நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் வழக்கம்போல் பெண்கள், அலங்கரிக்கப்பட்ட தேரை தோளில் சுமந்து வந்தனர். பின்னர் கூம்பு கொளுத்தப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நகர் முழுவதும் வாண வேடிக்கை நிகழ்ச்சியும் ஆங்காங்கே நடந்தன.
  வீடுகள்தோறும் பெண்கள் கொளுக்கட்டை, சுண்டலை சாமிக்கு படைத்து, பின்னர் குடும்பத்தினருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai