சுடச்சுட

    

    குறைதீர் கூட்டம் ரத்து: பொதுமக்களிடம் மனுக்களைப் பெற ஏற்பாடு

    By DIN  |   Published on : 13th December 2016 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஒரு வார காலம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவில்லை.  
    ஆனால், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொள்ள மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) என்.பாலச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழையும் இடத்தில் அமர்ந்து, மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். 100-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார்.
    வழக்கமாக மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு பொதுமக்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு, கோரிக்கை மனு அளிக்க திரண்டு வருவர். ஆனால், திங்கள்கிழமை கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
    கூட்டம் ரத்து என மாவட்ட நிர்வாகம் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படாத நிலையிலும், ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து ஒரு வார கால அரசு முறை துக்கம் திங்கள்கிழமை வரை அனுசரிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெருமளவில் ஆட்சியர் அலுவலகம் வரவில்லை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai