Enable Javscript for better performance
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி: கோயிலில் தீபம் ஏற்றாமல் வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    ஜெயலலிதாவுக்கு அஞ்சலி: கோயிலில் தீபம் ஏற்றாமல் வழிபாடு

    By DIN  |   Published on : 13th December 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாமக்கல் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றாமல் பொதுமக்கள் திங்கள்கிழமை வழிபாடு நடத்தினர்.
    நாமக்கல் நகரம் மலைக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீரங்கநாதர் கோயில் மற்றும் படிக்கட்டுகளில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா அன்று பக்தர்கள், பொதுமக்கள் 1,008 அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவர்.  
     ஆனால் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திங்கள்கிழமை மாலை ஸ்ரீரங்கநாதர் கோயிலில் பக்தர்கள், பொதுமக்கள் தீபம் ஏற்றாமல் வழிபட்டனர். அடுத்த ஆண்டு கோயிலில் வழக்கம்போல் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai