சுடச்சுட

  

  திறந்தவெளி கழிப்பிடம்: ஜன.1 முதல் அபராதம் விதிக்க முடிவு

  By DIN  |   Published on : 13th December 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துபவர்கள் மீது வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் வரும் 31-ஆம் தேதி முற்றிலும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட உள்ளது. இதனால், ஊராட்சி பகுதியிலுள்ள குடியிருப்புகளில் கழிப்பிடங்களை உபயோகப்படுத்தவும், கழிப்பிடம் இல்லாத வீடுகளில் வசிக்கும் நபர்கள், வீடுகளில் புதிதாக கழிப்பிடம் கட்டி பயன்படுத்த வேண்டும்.
  இதனால், கழிப்பிடம் இல்லாத வீடுகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.12,000-ஐ பெற்று புதிய தனி நபர் இல்லக் கழிப்பிடம் கட்டிக் கொள்ள வேண்டும்.
  மேலும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் திறந்தவெளி கழிப்பிடம் முற்றிலுமாக தடை செய்யப்பட உள்ளது.  இதை மீறுபவர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரம் சட்டம் 1939 பிரிவு 34, 124, 13 இன்படி தினசரி அபராதமும், தண்டனை விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai