சுடச்சுட

    

    நாளை ஜமீன் இளம்பள்ளியில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம்

    By DIN  |   Published on : 13th December 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் வட்டம், ஜமீன் இளம்பள்ளி கிராமத்தில் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
    ஜமீன் இளம்பள்ளி அம்மன் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகிக்கிறார். ஜேடர்பாளையம் உள்வட்டத்துக்குள்பட்ட இ.நல்லாக்கவுண்டம்பாளையம், ஜமீன் இளம்பள்ளி ஆகிய வருவாய்க் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று ஆட்சியரிடம் குறைகளைத் தெரிவிக்கலாம்.
    மேலும் முகாமில் பயனாளிகளுக்கு ஆட்சியர் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் என திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் ஜி.மகாத்மா தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai