சுடச்சுட

    

    படைப்பாற்றல் போட்டி:கல்லூரி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

    By DIN  |   Published on : 13th December 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படவுள்ள படைப்பாற்றல் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவர்களிடையே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் மாணவ, மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    அந்த வகையில் 2016-ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 20-ஆம் தேதி காலை 9 மணியளவில் மோகனூர் சாலை நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai