சுடச்சுட

    

    பேரிடர் மேலாண்மை ஓவியப் போட்டி: அரசுப் பள்ளி மாணவர் சாதனை

    By DIN  |   Published on : 13th December 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை ஓவியப் போட்டியில் நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளி மாணவர், மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    பள்ளி மாணவ, மாணவியருக்கான, மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஓவியப்போட்டி, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து மண்டல அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் 32 பேர் கலந்து கொண்டனர். அதில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கண்ணன், மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தார்.
    வெற்றி பெற்ற மாணவரை, பள்ளித் தலைமையாசிரியர் அல்லிமுத்து, உதவித் தலைமையாசிரியர்கள் ஜெகதீசன், உமா, ஓவிய ஆசிரியர் சேகர், ஆசிரியர்கள், பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai