Enable Javscript for better performance
மறைந்த முதல்வருக்கு அஞ்சலி; அதிமுகவினர் மொட்டையடித்து ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    மறைந்த முதல்வருக்கு அஞ்சலி; அதிமுகவினர் மொட்டையடித்து ஊர்வலம்

    By DIN  |   Published on : 13th December 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ராசிபுரம் அருகே அதிமுகவினர் 350-க்கும் மேற்பட்டோர் மொட்டையடித்து மௌன ஊர்வலம் நடத்தினர்.
    நாமகிரிப்பேட்டை அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில், மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதையடுத்து ஒன்றிய அதிமுக செயலர் இ.கே.பொன்னுசாமி தலைமையில், அதிமுகவினர் 350-க்கும் மேற்பட்டோர் மொட்டையடித்துக் கொண்டு மௌன ஊர்வலம் நடத்தினர்.
    முன்னதாக ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர்கள், பின்னர் மங்களபுரம், ஆயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா உருவப் படத்துடன் ஆயிரக்கணக்கானோர் மௌன ஊர்வலம் நடத்தி மலரஞ்சலி செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai