சுடச்சுட

  

  மாணவிகள், பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 13th December 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியார், நிறுவனங்கள் நடத்தும் சிறார், மாணவிகள் மற்றும் பெண்கள் விடுதிகளை வரும் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் ஆகியோர் சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர்.
  இந்த விடுதிகள் பொதுவாக அரசு, அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார், தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகின்றன.
  இத்தகைய சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
  நாமக்கல் மாவட்டத்தில் அரசாணையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகளை ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் தொடர் கண்காணிப்பு செய்து வருகிறது.
  ஆகவே, இந்த அமைப்புகள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைபடுத்தும்) சட்டம் 2014-கீழ் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்திட அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 16ஏ, கண்டர் பள்ளி சந்து, மோகனூர் சாலை நாமக்கல் 637001 என்ற முகவரியில் நேரில் அணுகலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai