சுடச்சுட

  

  மாத உதவித்தொகை நிறுத்தம்: மாற்றுத்திறனாளியின் பெற்றோர் தவிப்பு

  By DIN  |   Published on : 13th December 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே உதவித்தொகை வழங்க முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்து விட்டதால், மாற்றுத்திறனாளியின் பெற்றோர் கடந்த 3 மாதங்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  நாமக்கல் ஏ.எஸ் பேட்டையைச் சேர்ந்தவர் முத்தையன்-அம்புஜம் தம்பதியின் மகள் ரேவதி(25). இவர் பிறவிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் அரசு வழங்கும் ஊனமுற்றோருக்கான மாத உதவித்தொகை பெற்று வந்தார். இந்நிலையில் தொடர்ந்து இவர் மாத உதவித்தொகையை பெற வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கடந்த 3 மாதங்களாக உதவித்தொகையைப் பெற முடியவில்லை.
  எழுந்து நடக்க முடியாமலும், பேசும் திறன் இல்லாமலும் உள்ள ரேவதியை அவரது பெற்றோர்கள் மிகவும் சிரமத்துடன் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதார் எடுக்க வட்டாசியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்குமேல் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
  வயதான காலத்தில் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், வருமானம் இல்லாமல் மாற்றுதிறனுள்ள மகளைப் பராமரிக்க முடியாமல் பரிதவித்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாத உதவித்தொகை தொடர்ந்து கிடைத்திடவும், ஆதார் எடுக்கவும் உதவி செய்ய வேண்டும் என ரேவதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
  ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க திங்கள்கிழமை காலை ஆட்சியர் அலுவலகம் வந்த ரேவதியின் பெற்றோர், குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் மனுவை அதிகாரிகளிடம் அளித்துவிட்டு சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai