சுடச்சுட

  

  தமிழகத்தில் மூடப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  மாவட்ட மாநாடு நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் டி.ஜோதிபாசு சங்க கொடியை ஏற்றி வைத்தார். தலைவர் எம்.வெற்றிவேல் தலைமை வகித்தார். ஈ.அகல்யா அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
  மாவட்ட குழு உறுப்பினர் பி.ரஞ்சித்குமார் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் எ.டி.கண்ணன், செயலர் பி.உச்சிமாகாளி, மாவட்ட செயலர் டி.சரவணன் பேசினர்.  
   முன்னதாக நாமக்கல் நேதாஜி சிலை தொடங்கி குளக்கரை பூங்கா வரை பேரணி நடைபெற்றது.அங்கு மாணவர்கள் பாரதி பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை, தீண்டாமைக்கு எதிரான உறுதி மொழி ஏற்றனர்.
  மாநாட்டில் புதிய மாவட்ட குழு தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவராக எம்.வெற்றிவேல், செயலராக டி.சரவணன், துணைத் தலைவர்களாக அகல்யா, கோபால், தேன்மொழி துணைச் செயலர்களாக ரஞ்சித், பாலகுமார், சந்திரகலா உள்ளிட்ட 35 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யபட்டது.
  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய கல்வி கொள்கை, தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவருவதை எதிர்ப்பது. தனியார் கல்வி நிறுவனங்களில் அரசானை 92-ன் படி எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
   தமிழகத்தில் முழுமையான சமச்சீர் கல்வியை அமுல்படுத்த வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவிகளுக்கு ஓய்வறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும.
   நாமக்கல் மாவட்டத்தில் அரசு சட்ட, மருத்துவ, பொறியியல், திரைப்பட கல்லூரிகளை துவக்க வேண்டும். புதிதாக அரசு விடுதிகளை துவக்க வேண்டும். தமிழகத்தில் மூடப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும்.
   அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆய்வகம், குடிநீர்,கழிவறை போன்ற அடிப்படை
  வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.  ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டாய நன்கொடையை தடுக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 -ன் படி தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.  விலைவாசி உயர்விற்கு ஏற்ப விடுதி மாணவர்களின் உணவுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.
   அனைத்து பள்ளி கல்லூரிகளின் முன்பு வேகத்தடை, பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai