சுடச்சுட

  

  டிச.25-இல் எலச்சிப்பாளையம் காவலர்களை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 18th December 2016 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்யக்கோரி அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து எலச்சிப்பாளையத்தில் வரும் 25-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  எலச்சிப்பாளையம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் அக்கட்சியின் ஒன்றியச் செயலர் சி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், தமாகா, நாடார் பேரவை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
  கூட்டத்தில் எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலர்கள் பலர் 5 முதல் 7 ஆண்டுகள் வரை பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஏழைகளின் கோரிக்கைகளை கேட்காமல் உதாசீனப்படுத்துகின்றனர்.
  இதைக் கண்டித்தும், காவலர்களின் சட்ட விரோத செயல்களைத் தடுக்க பல ஆண்டுகளாக இங்கு பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்யக் கோரியும் எலச்சிப்பாளையத்தில் வரும் 25-ஆம் தேதி அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai