சுடச்சுட

  

  நாமக்கல்லில் இன்று அண்ணா பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

  By DIN  |   Published on : 18th December 2016 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் போட்டிகளில் 234 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பரிசு வழங்கிப் பேசுகிறார்.
  திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அண்ணாவின் 108-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்குப் பேச்சு, கட்டுரை, கவிதை
  ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் இறுதிப்போட்டிகள் நாமக்கல்லில் சனிக்
  கிழமை நடைபெற்றன.
  இதில் தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களிலிருந்து 234 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
  இந் நிகழ்ச்சியில் கழக துணைப் பொதுச் செயலர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, மாநில இளைஞர் அணி இணைச் செயலர் மு.பெ.சுவாமிநாதன், துணைச் செயலாளர்கள் ஆர்.டி. சேகர், சுபா சந்திரசேகர், தாயகம் கவி, அசன் முகம்மது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி. பைந்தமிழ் பாரி, ஜோயல், நாமக்கல் கிழக்கு மாவட்டச் பொறுப்பாளர் பார்.இளங்கோவன், மேற்கு மாவட்டச் செயலர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ, முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திசெல்வன், சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  போட்டி தொடக்க நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த விழா, நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
  முன்னதாக காலை 8 மணிக்கு நாமக்கல் பேருந்து நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட அண்ணாசிலையை மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.
  நாமக்கல் வருகை: திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறைவு காரணமாக ஸ்டாலின் வருகை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாலை அவர் நாமக்கல் வந்தார். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
  சனிக்கிழமை பகலில் சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட ஸ்டாலின் இரவு 7.15 மணியளவில் நாமக்கல் வந்தார். விழா நடைபெறும் தனியார் ஹோட்டலுக்குச் சென்ற அவருக்கு அங்கு கூடியிருந்த கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிமாறப்பட்ட இரவு உணவைப் பார்வையிட்ட ஸ்டாலின், மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
  இதையடுத்து, ஹோட்டலில் இருந்து 7.35 மணிக்கு வெளியில் வந்த அவர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருச்சி சாலையில் உள்ள ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai