சுடச்சுட

  

  பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அழிப்பு

  By DIN  |   Published on : 18th December 2016 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜேடர்பாளையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சனிக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன.
  ஜேடர்பாளையத்தில் காவல் நிலையத்துக்கு உள்பட்ட இருவேறு இடங்களிலிருந்து 289 கிலோ வெடி பொருள்கள், வெடிக்க பயன்படுத்தப்படும் 900 மீட்டர் வயர்கள் உள்ளிட்டவை அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன.
  இவை கபிலர்மலை அருú இருக்கூரில் தனியாருக்குச் சொந்தமான வெடிமருந்து கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருள்களை அழிக்க நீதிபதி தனபால் உத்திரவிட்டார்.
  அதன் அடிப்படையில் பரமத்தி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கைலாசம், சென்னை துணை வெடி மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் சுமிரன்குமார் மற்றும் போலீஸார் முன்னிலையில் நல்லூர் அருகே உள்ள பாமாகவுண்டம்பாளையத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் வெடி பொருள்கள் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது.
  அப்போது ஏற்பட்ட சப்தம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai