சுடச்சுட

    

    ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசல் சீர்படுத்தப்படுமா?

    By DIN  |   Published on : 18th December 2016 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ராசிபுரம் நகராட்சி பகுதி குறுகிய சாலை, தெருக்களைக் கொண்ட சிறிய நகரம். இந்தப் பகுதியில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.
    மேலும் இந்தக் குறுகிய சாலைகள் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு, குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.
    மேலும் கவரைத் தெரு, சின்னக் கடை வீதி, கடை வீதி போன்ற பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்துவதால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்களின் நலன்கருதி விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai