சுடச்சுட

  

  ராசிபுரம் நகரில் 3 நாள்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

  By DIN  |   Published on : 18th December 2016 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் நகருக்குக் குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர் பாதை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் வரும் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 3 நாள்களுக்குக் குடிநீர் விநியோகம் இருக்காது என ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆட்டையாம்பட்டி அருகே நெடுஞ்சாலை துறை மூலம் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், ராசிபுரம் நகருக்கு குடிநீர் வழங்கும் குழாய் மாற்றியமைக்கப்படுகிறது. எனவே, டிசம்பர் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நகரில் குடிநீர் விநியோகம்
  இருக்காது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai