சுடச்சுட

  

  பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் கடந்த புதன்கிழமையை விட சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,300-க்கு ஏலம் போனது.
  பரமத்தி வேலூர் வட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் காய்ச்சும் ஆலைகள் உள்ளன. இப்பகுதியில் விளையும் கரும்புகளை வெல்ல ஆலையினர் வாங்கிச் சென்று உருண்டை, அச்சு வெல்லங்களாக தயார் செய்து பிலிக்கல்பாளையத்தில் உள்ள ஏலச் சந்தையில் விற்கின்றனர். ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் இங்கு ஏலம் நடைபெறுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு அச்சு வெல்லம் 8 ஆயிரம் சிப்பங்களும் (ஒரு சிப்பம் 30 கிலோ), உருண்டை வெல்லம் 9 ஆயிரம் சிப்பங்களும் ஏலத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ. 1,200-க்கும், அச்சு வெல்லம் ரூ. 1,250-க்கும் ஏலம் போனது. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு உருண்டை வெல்லம் 8 ஆயிரம் சிப்பங்களும், அச்சு வெல்லம் 9 ஆயிரம் சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன.
  இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,300-க்கும், அச்சு வெல்லம் ரூ. 1,300-க்கும் ஏலம் போனது. பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி வெல்லம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai