சுடச்சுட

  

  8-ஆவது ஊதியக் குழுவை விரைவில் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஓய்வுபெற்றோர் கோரிக்கை

  By DIN  |   Published on : 18th December 2016 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எட்டாவது ஊதியக் குழுவை தமிழக அரசு விரைந்து அமைத்திட வேண்டும் என தமிழக அரசு ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
  தமிழக அரசு ஓய்வூதியர்கள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் ராசிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.ராமசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் இரா.வரதராசன் வரவேற்றார்.
  மாவட்டச் செயலாளர் அ.பழனிமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். சங்க மாநிலத் தலைவர் மா.கண்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
  கூட்டத்தில், புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துத் தெரிவிப்பது, 7 சதவீதம் அகவிலைப்படி வழங்கி அரசாணை பிறப்பித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, ஓய்வூதியலிருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் ஒப்புவிப்புத் தொகையானது 15 ஆண்டுகள் தொடர்ந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
  இதை 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டுவது, ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  கூட்டத்தில் மாவட்டச் செயலர் ஆ.முத்துசாமி, எஸ். ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai