சுடச்சுட

  

  அஞ்சல் துறை சார்பில் விநாடி வினா போட்டி: திருச்செங்கோடு பள்ளி முதலிடம்

  By நாமக்கல்,  |   Published on : 19th December 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அஞ்சல் துறை சார்பில் நடத்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான விநாடி வினா போட்டியில் திருச்செங்கோடு பள்ளி முதலிடம் பெற்றுள்ளது.
   அஞ்சல் துறை நாமக்கல் கோட்டம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான விநாடி வினா போட்டி நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வ.முத்துராஜ் தலைமை வகித்தார்.
   போட்டியில் நாமக்கல் அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட 11 பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் 3 பேர் கொண்ட குழுக்களாகப் பங்கேற்றனர். பொது அறிவு, அஞ்சல் தலை சேகரிப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவ, மாணவியர் பதில் அளித்தனர்.
   போட்டியில் திருச்செங்கோடு கேஎஸ்ஆர் அவ்வை பள்ளி மாணவர்கள் 115 மதிப்பெண் பெற்று முதலிடமும், 75 மதிப்பெண் பெற்று நாமக்கல் கீரம்பூர் நவோதயா பள்ளி மாணவர்கள் 2-ஆம் இடமும் பிடித்தனர்.
   வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிருக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வி. முத்துராஜ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் நினைவு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai