சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் சாயப் பட்டறைக்கு "சீல்'

    By குமாரபாளையம்  |   Published on : 19th December 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் அருகே சட்ட விரோதமாக இயங்கியதோடு, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றிய சாயப் பட்டறைக்கு வருவாய்த் துறையினர் சனிக்கிழமை இரவு "சீல்' வைத்தனர்.
     குமாரபாளையத்தை அடுத்த கரட்டாங்காடு பகுதியில் ஓடையில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாகவும், அனுமதியின்றி சாயப்பட்டறை இயங்குவதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
     அதன்பேரில், குமாரபாளையம் வட்டாட்சியர் ரகுநாதன் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
     அப்போது, சட்ட விரோதமாக ஓடையில் மணல் அள்ளப்பட்டது தெரிந்தது. மேலும், கரும்புத் தோட்டத்தின் நடுவில் ரகசியமாக சாயப் பட்டறை இயங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சாயப்பட்டறைக்கு "சீல்' வைத்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai