சுடச்சுட

  

  ஜெயலலிதா மறைவுக்கு மாவட்ட அதிமுகவினர் அஞ்சலி

  By நாமக்கல்,  |   Published on : 19th December 2016 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் கூட்டம், அஞ்சலி நிகழ்ச்சி நாமக்கல்லில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும், மாவட்டச் செயலருமான பி.தங்கமணி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நகர, ஒன்றிய, பேரூர் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
   இதில் பேசிய அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா, எம்பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏக்கள் பொன்.சரஸ்வதி, சி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதபடியே பேசினர். இதில் பங்கேற்ற பெண்களும் அழுதனர். பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிட மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியினர் பங்கேற்று ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai