சுடச்சுட

  

  திருச்செங்கோட்டில் புதிய மாவட்ட கல்வி அலுவலகம்: கல்வித்துறை பணியாளர்கள் கோரிக்கை

  By நாமக்கல்,  |   Published on : 19th December 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு மாவட்ட கல்வி அலுவலகத்தைத் தொடங்க வேண்டும் எனக் கல்வித் துறை பணியாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
   சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் கா.செந்தில் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர்கள் ஜி.செங்கோட்டுவேல், வ.தங்கராசு, பொருளாளர் ம.கலையரசன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ரா.ஜெயரத்தினகாந்தி வரவேற்றார். மாநில பொதுச்செயலர் வி.முருகேசன் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக மாவட்ட கல்வி அலுவலகத்தைத் தொடங்க வேண்டும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர் நிலையில் நேர்முக உதவியாளரை நியமிக்க வேண்டும்.
   தேர்வு துறைக்கென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் தனிப்பிரிவுத் தொடங்கி, ஒரு கண்காணிப்பாளர், இரண்டு உதவியாளர், தட்டச்சர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை வழங்க வேண்டும். முதுகலை பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு முடித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் அமைச்சுப்பணியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடங்களை மீண்டும் வழங்கவேண்டும்.
   அரசு நலத்திட்டங்களை செயல்படுத்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தனியாக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். அமைச்சுப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 சதவீதம் பட்டதாரி ஆசிரியர், 2 சதவீதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இந்த நிலுவைப் பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
   மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒரு நிர்வாக அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஊக்க ஊதியத்தை முன்தேதியிட்டு உடனடியாக வழங்க வேண்டும்.
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai