Enable Javscript for better performance
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம்

    By நாமக்கல்,  |   Published on : 19th December 2016 03:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    namakkal_anjneya

     

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஞாயிற்றுக்கிழமை 1,008 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
     ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடப்பது வழக்கம். மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடைபெற்றது.
     அதைத் தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக் காய்த்தூள், மஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
     மதியம் 1 மணிக்கு சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai