சுடச்சுட

    

    மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாளை நாமக்கல் வருகை

    By நாமக்கல்  |   Published on : 19th December 2016 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (டிச.20) நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
     இதுகுறித்து மாவட்ட பொதுச் செயலர் பி.முத்துக்குமார் வெளியிட்ட அறிக்கை:
     மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை காலை நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெறும் தொழிலதிபர் சந்திப்பில் கலந்துகொண்டு
     கோரிக்கைகளைக் கேட்டறிகிறார்.
     இதைத்தொடர்ந்து மோகனூர், நாமக்கல், வெண்ணந்தூர், ராசிபுரம், வையப்பமலை, எலச்சிப்பாளையம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai