சுடச்சுட

  

  மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை; அமைச்சர் வி.சரோஜா வழங்கினார்

  By ராசிபுரம்,  |   Published on : 19th December 2016 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வருவாய்த் துறை சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.44 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்தார்.
   சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
   முன்னதாக, ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
   நிகழ்ச்சியில் ராசிபுரம் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கே.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai