சுடச்சுட

    

    வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில மாநாடு நடத்த திட்டம்

    By நாமக்கல்,  |   Published on : 19th December 2016 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வழக்குரைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நலனைக் காக்கவும் விரைவில் கூட்டமைப்பு சார்பில் மாநில மாநாடு நடத்தப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.கே.வேல் தெரிவித்தார்.
     கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     கூட்டமைப்புத் தலைவராக எஸ்.கே.வேல், செயலாளராக செல்ல.ராசாமணி, பொருளாளராக காமராஜ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். தேர்தல் ஆணையர்கள் சந்திரசேகர், ஸ்ரீதரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.விழா முடிவில் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.கே.வேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
     வழக்குரைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நலனைக் காக்கவும் விரைவில் கூட்டமைப்பு சார்பில் மாநில மாநாடு நடத்தப்படும். தற்போது வழக்குரைஞர்களுக்கு தமிழகத்தில் சேம நலநிதியாக ரூ. 5.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
     கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வழக்குரைஞர் சட்ட திருத்தத்தை எதிர்த்துப் போராடிய வழக்குரைஞர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டமைப்பு சார்பில் அனைத்து மாவட்ட வழக்குரைஞர் சங்கங்களுக்கும் தனித்தனியாக இணையதளம் தொடங்க உள்ளோம் என்றார்.
     பதவி ஏற்பு விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரண்டு நிமிடம் மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai