சுடச்சுட

  

  ஆக்கிரமிப்பு திருமண மண்டபம்: அகற்றக் கோரி போராட்டம்

  By நாமக்கல்  |   Published on : 20th December 2016 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை அகற்ற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஏணி பெருமாள் (63). சமூக ஆர்வலரான இவர், குருசாமிபாளையம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி, தொடர்ந்து மனு அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
   இந்த நிலையில் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்த அவர், ஆட்சியர் அலுவலகம் நுழைவுவாயில் முன்பு கோரிக்கை அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதன்பிறகு அவர் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்தார், அந்த மனுவில், குருசாமிபாளையத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தி வருவதால், தனக்கு கொலை மிரட்டல் வருகிறது.
   எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். இதனால் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை அகற்ற பிள்ளாநல்லூர் பேரூராட்சி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai