சுடச்சுட

    

    காசி விஸ்வநாதர் ஆலய காவிரிக் கரையில் கொட்டப்படும் கழிவுகளால் நீர் மாசுபடும் நிலை

    By பரமத்தி வேலூர்  |   Published on : 20th December 2016 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலய காவிரிக் கரையில் கொட்டப்படும் கழிவுகளால் சுற்றுப்புறச் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், காவிரி நீர் மாசுபடுவதாகவும், உடனடியாக இதுபோன்ற செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     பரமத்தி வேலூரில் பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இக் கோயில் காவிரிக் கரை காசிக்கு அடுத்தபடியாக உள்ளதாகவும், இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, கோயில் விழாக்களுக்காக புனித நீர் எடுத்துச் செல்வது மற்றும் ஈமக் காரியங்கள் செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளைச் செய்தால், காசியில் செய்வதற்கான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தினசரி வந்து செல்கின்றனர்.
     வற்றாத காவிரி எனவும் பெயர்பெற்ற இக் காவிரியில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான கட்டடக் கழிவுகள், பழைய துணிமணிகள், குப்பைகள், கோழிக் கழிவுகள் போன்றவை காவிரியில் கொட்டப்பட்டு வருகின்றன.
     இதனால் காவிரி நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்று கழிவுகளை கொட்டுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து காவிரியைக் காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai