சுடச்சுட

    

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.2.44 லட்சம் நலத் திட்ட உதவி அளிப்பு

    By நாமக்கல்,  |   Published on : 20th December 2016 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 125 பயனாளிகளுக்கு ரூ.2,44,600 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
     நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, குடிசை மாற்று வாரியத்தில் வீடு, புதிய குடும்ப அட்டைகள், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 437 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.
     இக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 125 பயனாளிகளுக்கு ரூ.2,44,600 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
     சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளி கிருஷ்ணன், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் கே.கணேசன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.அசோகன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ச.ராமகிருஷ்ணன், கலால் உதவி ஆணையர் புகழேந்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai