சுடச்சுட

  

  வீட்டுமனை கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  By நாமக்கல்,  |   Published on : 20th December 2016 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பழந்தமிழர் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
   ஆர்ப்பாட்டத்துக்கு பழந்தமிழர் மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சு.தனகோடி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மதுரைவீரபோயன், துணைப் பொதுச் செயலர் வெங்கடாசலம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
   நாமக்கல் மாவட்டத்தில் கல் உடைக்கும் தொழிலாளர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் கூலித் தொழிலாளர்கள் என போயர் சமூகத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை கேட்டு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
   உடனடியாக இந்த தொழிலாளர்களுக்கு வீட்டுமனை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி, கல் உடைக்கும் தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
   ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் சுப்ரமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், ஜெயந்தன், மதியழகன், மூவேந்தன், மணிகண்டன், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai