சுடச்சுட

  

  ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் முற்றுகை

  By பரமத்தி வேலூர்,  |   Published on : 21st December 2016 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் வட்டம், பிலிக்கல்பாளையம் 2-வார்டு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்துவந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 60 நாள்களாக வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என பிலிக்கல்பாளையம் ஊராட்சி மன்றம், ஒன்றிய மேற்பார்வையாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.
   பிலிக்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் 100-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு கடந்க 60 நாள்களுக்கு மேலாக இத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கவில்லை எனவும், மற்ற வார்டுகளில் பணிபுரிந்து வருவோருக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகக் கூறி, திடீர் என பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பிலிக்கல்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் சத்தியாவை முற்றுகையிட்டனர்.
   தகவல் அறிந்து அங்குவந்த கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, சீனிவாசன் ஆகியோரிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
   இதனால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
   இதனையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஜேடர்பாளையம் போலீஸார் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாள்களுக்குள் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பணியாளர்கள், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai