சுடச்சுட

  

  ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு நிதி உதவி: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

  By நாமக்கல்,  |   Published on : 21st December 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக அரசின் சார்பில் ரூ.20,000 நிதி உதவி பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கடந்த 16ஆம் தேதிக்குள் வர வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
   கிறிஸ்தவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை வரும் 30ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807 (5வது தளம்), அண்ணாசாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai