சுடச்சுட

  

  தேசிய நெடுஞ்சாலையில் மத்திய அமைச்சர் ஆய்வு

  By ராசிபுரம்,  |   Published on : 21st December 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
   சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு பாதையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், அப் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ராசிபுரம் அருகே பிரதான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையான ஏடிசி டெப்போ, ஆட்டையாம்பட்டி பிரிவு பாதை ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
   நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், இது குறித்து மக்களவையில் வலியுறுத்திப் பேசியுள்ளார். மேலும், மத்திய சாலை பாதுகாப்பு துறை அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார். இந் நிலையில், இச் சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்த அமைச்சர், மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai