சுடச்சுட

  

  தொழிலதிபர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

  By நாமக்கல்,  |   Published on : 21st December 2016 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொழிலதிபர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
   நாமக்கல்லுக்கு வருகை தந்த, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை காலை தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார். தொழிலதிபர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர் பேசியது: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழகத்துக்கு அதிக திட்டங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை-கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரைச் சாலையை அகலப்படுத்த வேண்டும் என மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
   இச் சாலையில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாத் தலங்களும், 60 சதவிகித ஆன்மிகத் தலங்களும் உள்ளன. இத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.10,000 கோடி நிதி வழங்கத் தயார் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
   புதிதாக அமைக்கப்படவுள்ள குளச்சல் துறைமுகம் உலகத் தரம் வாய்ந்த துறைமுகமாக அமையும். இந்த துறைமுகம் இந்தியாவின் நுழைவு வாயிலாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த துறைமுகத்தை தொழிலதிபர்கள், தொழில் மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
   தொழிலதிபர்கள் வாழ்க்கையில் தற்போதுள்ள நிலையில் இருந்து, 100 மடங்கு உயர்ந்து முன்னேற வேண்டும். அதற்கு திட்டமிடுங்கள், மத்திய அரசு உதவத் தயாராக இருக்கிறது. இந்தியாவில் பொருளாதாரத்தைச் சீர்செய்ய, பிரதமர் மோடி நரசிம்ம அவதாரம் எடுத்துள்ளார் என்றார்.
   தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.நல்லதம்பி, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டலத் தலைவர் பி.செல்வராஜ், மக்களுக்காக அமைப்பின் தலைவர் செல்ல.ராசாமணி, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai