சுடச்சுட

  

  நாமக்கல் ஒன்றியம்: 5 ஆண்டுகளில் ரூ.62.97 கோடியில் வளர்ச்சிப் பணிகள்; ஆட்சியர் தகவல்

  By நாமக்கல்,  |   Published on : 21st December 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.62.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்.
   நாமக்கல் மாவட்டம், நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வீசாணம், வேட்டாம்பாடி, சிவியாம்பாளையம், வகுரம்பட்டி, வள்ளிபுரம் மற்றும் சிலுவம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   சாலைப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள், தனி நபர் கழிப்பறை உள்ளிட்ட பணிகள் என ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   இந்த ஆய்வு குறித்து ஆட்சியர் தெரிவித்தது: நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.62.97 கோடி மதிப்பீட்டில் 8,376 பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.58.87 கோடி மதிப்பீட்டில் 7,738 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் 176 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
   இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் 1,246 புதிய திட்டப் பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.88.92 லட்சம் மதிப்பீட்டில் 211 திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் 1,035 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
   நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் இதுவரை மொத்தம் ரூ.67.93 கோடி மதிப்பீட்டில் 9,622 புதிய திட்டப் பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.59.76 கோடி மதிப்பீட்டில் 7,949 திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, ரூ.8.76 கோடி மதிப்பீட்டில் 1,211 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
   ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, நாமக்கல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொ.மாதேஸ்வரன், ச.லோகநாதன், உதவிப் பொறியாளர்கள் சாந்தா ராமன், ஆர்.நைனாமலைராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இ.ஈஸ்வரன், பணி மேற்பார்வையாளர்கள் குமார், ஆர்.கருப்பையா, கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai