சுடச்சுட

  

  முன்விரோதம்: நண்பரை பேனாவால் குத்தியவர் கைது

  By பரமத்தி வேலூர்,  |   Published on : 21st December 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் முன்விரோதம் காரணமாக நண்பரை பேனாவால் கழுத்தில் குத்தியவரை பரமத்தி வேலூர் போலீஸார் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
   பொத்தனூரைச் சேர்ந்தவர் நவீன்குமார் (21) கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஆனந்தன் (30) கட்டடத் தொழிலாளி. நவீன்குமார், தனது நண்பர் ஆனந்தனை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மறுநாள் நவீன்குமார் பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை பார்த்துள்ளார். அப்போது பணம் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்து நண்பர் ஆனந்தன்தான் வீட்டுக்கு வந்தபோது பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார் என பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
   இந் நிலையில், திங்கள்கிழமை இரவு நவீன்குமார் பொத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நின்று கொண்டிருந்ததாராம். அப்போது அங்குவந்த ஆனந்தன் நவீன்குமாரிடம் பணத்தை திருடியதாக பொய் வழக்கு கொடுத்துள்ளாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஆனந்தன் நவீன்குமார் கழுத்தில் பேனாவால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த நவீன்குமார் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
   நண்பரை பேனாவால் குத்திய ஆனந்தனை பரமத்தி வேலூர் போலீஸார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai