சுடச்சுட

  

  மோகனூர் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

  By நாமக்கல்,  |   Published on : 21st December 2016 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மோகனூர் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மக்களுக்காக (ஃபார் பப்ளிக்) அமைப்பு கோரிக்கை விடுத்தது.
   மக்களுக்காக அமைப்பின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் செல்ல.ராசாமணி, மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: தமிழகம் முழுவதும் பருவமழை பொய்த்துள்ளது. குறிப்பாக, காவிரி பாயும் சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயம் செய்ய முடியாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வறுமையால் வாடி வருகின்றனர். பல இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
   எனவே, மத்திய அரசு கர்நாடக அரசை வலியுறுத்தி காவிரியில் குறைந்தபட்சம் தினமும் 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியக் குழுவை அனுப்பி வறட்சிப் பகுதிகளைப் பார்வையிட்டு, இப் பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
   பயிர்ப் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவுசெய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மோகனூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க மத்திய அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
   சேலத்தில் இருந்து நாமக்கல், மோகனூர் வழியாகச் செல்லும் நாகர்கோவில் விரைவு ரயிலை மோகனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   சென்னையில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக மோகனூர் வரை புதிய ரயில் இயக்க வேண்டும்.
   நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதியில் ஏராளமான ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்தால், ஆண்டு ஒன்றுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
   எனவே, மோகனூர் ஒன்றியத்தில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க இப் பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா அல்லது நவோதயா பள்ளிகளைத் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   
   
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai