சுடச்சுட

  

  வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை

  By நாமக்கல்  |   Published on : 21st December 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
   வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நகரத் தலைவர் சிங்காரம் தலைமையில் வெண்ணந்தூரில் அண்மையில் நடந்தது. செயலர் வெங்கடாஜலம் கோரிக்கை குறித்து பேசினார்.
   நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ராமசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது. நாமக்கல் தனி மாவட்டமாகி 18 ஆண்டுகள் ஆன பின்பும், வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு நேரடியாக பேருந்து போக்குவரத்து இல்லை.
   அதனால் இப் பகுதி மக்கள் நாமக்கல் வந்து செல்வதற்கு 3 பேருந்துகள் மாறிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
   இதனால் அலைச்சல் மற்றும் நேரம் விரயமாவதுடன், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
   இதனால் பல்வேறு தரப்பினரின் நிலையை கருத்தில் கொண்டு வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ரூபாய் நோட்டுகள் முழுமையாக அச்சடிக்கும் வரை ஓராண்டுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
   சிறார்களுக்கு மது கொடுப்பது, பள்ளி மாணவ, மாணவியர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
   தமிழக அரசு மக்கள் நலன் கருதி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
   தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை பொய்த்ததால், தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai