சுடச்சுட

  

  கொல்லிமலையில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
   நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாடு சீக்குப்பாறைப்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை (32), ரஞ்சித்குமார் (21) மற்றும் தேவனூர்நாடு பின்னம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (29) ஆகிய மூன்று பேரும் நாட்டு துப்பாக்கி வைத்து மலைப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
   இதனையடுத்து, வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார், வாசலூர்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் நாட்டு துப்பாக்கியைக் கொண்டு 3 பேரும் வன விலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது.
   இதனையடுத்து, மூன்று பேரையும் கைதுசெய்த வாழவந்திநாடு போலீஸார் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, 3 பேரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai