சுடச்சுட

  

  சிறுபான்மையின மக்களுக்கு ரூ.5 லட்சம் நலத் திட்ட உதவி அளிப்பு

  By நாமக்கல்,  |   Published on : 22nd December 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிறுபான்மையினர் 46 பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
   நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   இதில் அவர் பேசியது: சிறுபான்மையினருக்கு டாம்கோ மூலம் கடன் உதவி திட்டம், பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
   உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. சிறுபான்மையினர் மாணவ, மாணவியருக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
   மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ பிரிவினரும் இஸ்ரேலில் உள்ள புனிதத் தலமான ஜெருசலேம் சென்று வர அரசு ரூ.20,000 நிதி உதவி வழங்கி வருகிறது.
   எனவே, சிறுபான்மையினருக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
   விழாவில், 46 சிறுபான்மையினர் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை மற்றும் முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு உதவித்தொகை உத்தரவு, சிறுபான்மையினர் வகுப்பினைச் சேர்ந்த 18 பேருக்கு புதிய குடும்ப அட்டை, மாவட்ட புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் 13 பேருக்கு பல்வேறு திட்டங்களுக்கான கடன் தொகைகளை ஆட்சியர் வழங்கினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai