சுடச்சுட

    

    15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டி அருந்தியர் காலனியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், புதன்கிழமை அதிகாலை தண்ணீர் பிடிப்பதற்காக தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான ஜீவா (27) என்பவர், சிறுமியை வலுக்கட்டயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். சிறுமி சத்தம் போட்டதால், ஜீவா தப்பியோடிவிட்டார். இதனையடுத்து, சிறுமியை மீட்ட அப் பகுதி மக்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
     இதுகுறித்து சேந்தமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஜீவாவை தேடி வருகின்றனர். ஜீவாவுக்கு திருமணமாகி பெண் குழந்தை இருப்பதாகவும், மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai