சுடச்சுட

  

  டிச.27இல் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி

  By நாமக்கல்,  |   Published on : 22nd December 2016 04:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  agri

   

  பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த இலவச பயிற்சி வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா தெரிவித்தார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு மா, பாக்கு, மரவள்ளி மற்றும் காய்கறிப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
   இப் பயிற்சி முகாமில் மா, பாக்கு, மரவள்ளி மற்றும் காய்கறி ஆகிய பயிர்களின் சாகுபடிக்கேற்ற மண்வளத்தினைக் கண்டறியும் வழிமுறைகள், மண் வளத்தை மேம்படுத்தும் உத்திகள், மண்வளத்திற்கேற்ற சமச்சீர் உரமிடுதல் பற்றிய தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படும்.
   இப் பயிற்சி முகாமில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
   விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 26ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai