சுடச்சுட

  

  பரமத்தி: தனியார் பேருந்து சிறை பிடிப்பு

  By பரமத்தி வேலூர்,  |   Published on : 22nd December 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி நகர் பகுதிக்குள் வந்து செல்லாத தனியார் பேருந்தை செவ்வாய்க்கிழமை இரவு பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
   சேலத்தில் இருந்து கரூர் வரை செல்லும் தனியார் பேருந்து பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தி நகர் பகுதிக்குள் சென்று வருவதற்கான உரிமம் இருந்தும் பல நேரங்களில் வந்து செல்வதில்லை என பரமத்தி நகர் வாழ் பொதுமக்கள் பலமுறை அப் பேருந்தை சிறைப்பிடித்தும், புகார் அளித்தும் இருந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி சரண்யா (28) தனது 3 வயது குழந்தையுடன் நாமக்கல்லில் இருந்து பரமத்தி நோக்கி வந்த தனியார் பேருந்தில் பரமத்தி செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.
   தனியார் பேருந்தின் நடத்துனர் பரமத்திக்குள் பேருந்து செல்லாது எனவும், வேலூரில் இறங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளாராம். பரமத்தி நகர் பகுதிக்குள் வந்து செல்ல உரிமம் இருந்தும் இரவு நேரத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை வேலூரில் இறக்கி விட முயன்றதை அறிந்து, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பேருந்தை கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் பிரிவு சாலையில் சிறை பிடித்தனர். ஒவ்வொரு முறையும் காவல் துறையினர் மற்றும் தனியார் பேருந்து நிர்வாகத்தினர் இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என வாய்மொழியால் உறுதி மட்டும் அளித்து வருகின்றனர். ஆனால், அதன்படி நடப்பது இல்லை என கூறி சுமார் ஒன்றரை மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் அப் பேருந்தை சிறை பிடித்தனர்.
   இதனால் கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவழிப் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், அங்குவந்த பரமத்தி வேலூர் காவல் துறை ஆய்வாளர் கணபதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனாலும் பொதுமக்கள் தனியார் பேருந்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் வந்து உரிய பதில் அளித்தால் மட்டும் பேருந்து விடுவிக்கப்படும் எனக் கூறினர். பின்னர், பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai