சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்துக்குச் செல்லும் முட்டை லாரிகளை கீரம்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் பிடித்து உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
   தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது போலி முட்டைகள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமையிலான குழுவினர் கீரம்பூர் அருகே உள்ள சுங்கச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் நாமக்கல் பகுதியில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படும் முட்டை லாரிகளை தடுத்து நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர்.
   இதில் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட முட்டைகள் தரமானதாக உள்ளனவா எனவும், முட்டை மாதிரிகள் பகுப்பாய்வுக்காக மாதிரி எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட முட்டை ஏற்றிவந்த லாரிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனால் சுங்கச் சாவடி பகுதியில் பரபரப்பு நிலவியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai