சுடச்சுட

  

  ராசிபுரம் நகராட்சியில் ரூ.72.77 கோடியில் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

  By ராசிபுரம்  |   Published on : 22nd December 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடைத் திட்டம், கூடுதல் கட்டடப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   ராசிபுரம் நகராட்சியில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகராட்சி அலுவலக புதிய கூடுதல் கட்டடப் பணியினையும், ராசிபுரம் நகராட்சிப் பகுதிக்கான ரூ.55.42 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், தட்டாங்குட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர்த் திட்ட மேம்பாட்டுப் பணிகளையும், வ.உ.சி.நகர் பகுதியில் இதே திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் 7.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட மொத்தம் ரூ.72.77 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகரில் குடிநீóர் குழாய் இணைப்புகளுக்கு கட்டுப்பாட்டு வால்வு பொருத்தும் பணியினையும் அவர் ஆய்வு செய்தார்.
   அனைத்து பணிகளையும் துரிதமாகவும், நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
   இந்த ஆய்வின் போது, ராசிபுரம் நகராட்சி ஆணையர் பி.கிருஷ்ணமூர்த்தி, நகராட்சிப் பொறியாளர் பி.நடேசன், உதவி செயற்பொறியாளர் (பாதாள சாக்கடைத் திட்டம்) அண்ணாதுரை உட்பட நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai