சுடச்சுட

  

  ரூபாய் நோட்டு பிரச்னை: திரைப்பட வெளியீடு தள்ளிவைப்பு

  By நாமக்கல்  |   Published on : 22nd December 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் இரண்டு திரைப்படங்களை வெளியிடுவது தள்ளி வைக்கப்படுகிறது என்று நாமக்கல்லைச் சேர்ந்த திரைப்பட நடிகர் கோபிகாந்தி தெரிவித்துள்ளார்.
   நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு நடிகர் கோபிகாந்தியின் ஆர்எஸ்ஜி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. அவர் தற்போது தயாரித்து நடித்துள்ள வைரமகன், வீரக்கலை ஆகிய இரண்டு திரைப்படங்களின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, வெளியிடத் தயாராக உள்ளன.
   இந்த மாதமே திரைப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக மூன்று கட்டமாக ஆடியோ சிடி மற்றும் படத்துக்கான முழுப்பட விடியோ டிவிடியும் முன்பதிவு செய்யப்பட்டது. இந்த சிடி-க்காக சுமார் 5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
   மத்திய அரசின் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது அனைவரிடத்திலும் பணத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பணம் பெறுவதற்காக பொதுமக்கள் வங்கி ஏடிஎம்களின் முன்பு நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர்.
   இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பணப் புழக்கம் சீரடையும் வரை 2 திரைப்படங்களின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக நடிகர் கோபிகாந்தி தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai