சுடச்சுட

    

    வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதி

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 22nd December 2016 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் பகுதியில் கோழிப் பண்னையில் தங்கி வேலை பார்த்து வந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது குழந்தை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
     பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லூர், கபிலர்மலை, இருக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான முட்டை கோழிப் பண்ணைகள் உள்ளன. இக்க கோழிப்பண்ணைகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பரமத்தி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஒரிசா மாநிலம், கோரக்ப்பூரைச் சேர்ந்த சுனில் என்பவர் இக் கோழிப் பண்ணையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
     இவரது 5 வயது மகள் ஹன்சிகா திடீர் என உடல் நலக் குறைவால் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவருக்கு வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் நல்லூர் சுகாதாரத் துறையினர் அப் பகுதியில் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai