சுடச்சுட

  

  அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற 3 லாரிகள் பறிமுதல்

  By நாமக்கல்,  |   Published on : 23rd December 2016 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல்லில் அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
   நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சுகுமார் தலைமையில் துணை வட்டாட்சியர்கள், கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் புதன்கிழமை இரவு நாமக்கல் நகரில் பரமத்தி சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
   அப்போது அந்த வழியாக மண் ஏற்றி வந்த 2 லாரிகளைப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவற்றில் உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இன்றி மண் ஏற்றிச் செல்வது தெரியவந்தது.
   இதையடுத்து 2 லாரிகளையும் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் நாமக்கல் நகர் சேலம் சாலையில் நடத்திய சோதனையிலும் ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 3 லாரிகளின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க நாமக்கல் கோட்டாட்சியர் எம்.ராஜசேகரனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai